/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உலக மக்கள் நன்மைக்காக ஓசூரில் அசுவமேதயாகம்
/
உலக மக்கள் நன்மைக்காக ஓசூரில் அசுவமேதயாகம்
ADDED : நவ 09, 2024 03:49 AM
ஓசூர்: ஓசூரில், உலக மக்கள் நன்மைக்காக அசுவமேதயாகம் நடக்க இருப்பதாக, முன்னாள் காங்., எம்.எல்.ஏ., மனோகரன் மற்றும் சிவனடியார் தியாகராசன் ஆகியோர் கூறினர்.
ஓசூரில், நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:
உலக நலனுக்காகவும், உலக மக்கள் நன்மைக்காகவும், மக்களால் மக்களுக்காக பிரபஞ்ச மகா சங்கல்ப யாகம் மற்றும் மகா அசுவமேத யாகம் நடக்கிறது. ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவில் பின்புறத்தில் வரும், 30 முதல் அடுத்த மாதம், 4 ம் தேதி வரை ஆறு நாட்கள் யாகம் நடத்தப்படுகிறது. 108 யாக குண்டங்கள் அமைத்து, அதற்குள், 148 தெய்வங்களை அழைத்து, ஆதி பூதன் லிங்கம், ஆதிசிவலிங்கம், ஆதி மனோகரலிங்கம் தெய்வங்களை முன்நிறுத்தி, 1,008 யாகம் நடக்கிறது.யாகம் நடக்கும் போதும், நடத்தி முடித்த பின்பும் பல்வேறு மாற்றங்களை மக்கள் உணர முடியும். இதில் அனைவரும் பங்கேற்கலாம். அதேபோல் வரும், 18 முதல், 29 வரை, ஓசூர் ஆந்திரசமிதியில் பல்வேறு இலக்கிய, ஆன்மிக நிகழ்ச்சி நடக்கிறது.
இவ்வாறு கூறினர்.
ஐ.என்.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் முனிராஜ், காங்., நிர்வாகிகள் சத்திய மூர்த்தி, பத்தலப்பள்ளி கோபால், கோதண்டராமன், கணேஷ் உட்பட பலர் உடன் இருந்தனர்.