ADDED : ஏப் 13, 2026 12:58 AM
தேன்கனிக்கோட்டை: வேட்புமனுவை வாபஸ் பெறாத சுயேச்சை வேட்பாளர், சரமாரியாக தாக்கப்பட்டு, கத்தியால் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டியை சேர்ந்தவர் குமார், 35; கட்டட கான்ட்ராக்டர். தளி சட்டசபை தொகுதியில், சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
நேற்று கோட்டையூர் மலை கிராமத்திற்கு, தேர்தல் பிரசாரத்திற்காக, குமார் பைக்கில் சென்றார். கருக்காலி பள்ளம் அருகே ஓடிவந்த ஒரு பெண், விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக கூறி உதவி கேட்டார். அப்பெண் கூறிய இடத்துக்கு சென்ற குமாரை, அங்கு மறைந்து நின்ற இருவர், சரமாரியாக தாக்கி, கத்தியால் வெட்டி தப்பினர். அஞ்செட்டி போலீசார் விசாரித்தனர்.
அதில், குமார் வேட்புமனுவை வாபஸ் பெறாததால், மர்ம நபர்களால் அவர் தாக்கப்பட்டது தெரிந்தது. போலீசார், அவர்களை தேடுகின்றனர்.
