/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒரே குடும்பத்தினர் மீது தாக்குதல் பா.ஜ., கட்சியினர் நேரில் ஆறுதல்
/
ஒரே குடும்பத்தினர் மீது தாக்குதல் பா.ஜ., கட்சியினர் நேரில் ஆறுதல்
ஒரே குடும்பத்தினர் மீது தாக்குதல் பா.ஜ., கட்சியினர் நேரில் ஆறுதல்
ஒரே குடும்பத்தினர் மீது தாக்குதல் பா.ஜ., கட்சியினர் நேரில் ஆறுதல்
ADDED : நவ 26, 2025 01:43 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த மாசிநாயக்கனப்பள்ளியில் கடந்த, 23ம் தேதி, இஸ்லாமிய குடும்பத்தினரை, நில விவகாரம் தொடர்பாக, தி.மு.க.,வின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சம்பத், முன்னாள் ஒன்றியக்குழு தலைவி புஷ்பாவின் கணவர் சர்வேஷ் மற்றும் அவரது தரப்பினர் தாக்கினர்.
இதில் காயமடைந்த அப்துல் ரஹீம் குடும்பத்தினர், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை, பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ் தலைமையில், அக்கட்சியினர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர். இதில், முன்னாள் மாவட்ட செயலாளர் பிரவீன்குமார், ஒன்றிய தலைவர் சூர்யா, மண்டல தலைவர் மணி உட்பட பலர் உடன் இருந்தனர்.