ADDED : ஏப் 04, 2026 06:16 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி, காந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ், 29, ஓசூரில் சிலிண்டர் சப்ளை செய்யும் தொழி-லாளி. கடந்த, 1ல், கிருஷ்ணகிரி, பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே புல்லட்டில் சென்றார். அப்போது எதிர் திசையில் வாலிபர் ஒருவர், யமஹா பைக்கில் மோதுவது போல் சென்றார்.
இதுகுறித்து ரமேஷ் கேட்டுள்ளார். அந்த வாலிபர், ரமேசை கத்தியால் தாக்கி மிரட்டல் விடுத்தார். இது குறித்து அவர் அளித்த புகார்படி, கிருஷ்ண-கிரி டவுன் போலீசார் ரமேசை தாக்கிய பாப்பாரப்-பட்டியை சேர்ந்த பிரசாந்த், 22, என்பவரை தேடி வருகின்றனர்.
