தானியங்கி ஓட்டுனர் தேர்வு தளம் வகுப்பறைகள் காணொலியில் திறப்பு
தானியங்கி ஓட்டுனர் தேர்வு தளம் வகுப்பறைகள் காணொலியில் திறப்பு
ADDED : பிப் 27, 2026 06:45 AM

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரியில், தானியங்கி ஓட்டுனர் தேர்வு தளம், காவேரிப்பட்டணத்தில், 2.82 கோடி ரூபாயில் பள்ளி வகுப்பறை கட்டடம், ஓசூர், வேப்பனஹள்ளியில் துணை மின்நிலையம் உள்-ளிட்டவற்றை, சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம், முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
---தொடர்ந்து, கிருஷ்ணகிரி வட்டார போக்குவ-ரத்து அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தானியங்கி ஓட்டுனர் தேர்வு தளத்தை, டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் இனிப்பு வழங்கி, துவக்கி வைத்தனர். அதேபோல, காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றினர்.
அதேபோல, ஓசூர் சட்டசபை தொகுதிக்கு உட்-பட்ட சேவகானப்பள்ளி
யில் அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலை-யத்தின், மின் சேவையை ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் துவக்கி வைத்து அனைவ-ருக்கும் இனிப்பு வழங்கினார்.
கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், விஜயகுமார், மாநில, தி.மு.க., வர்த்தகர் அணி துணை செயலாளர் சீனிவாசன், காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., தலைவர் அம்ச-வேணி உள்பட பலர்
கலந்து கொண்டனர்.
