/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மத்துார் ஏரியில் குப்பைக்கு இரவில் தீ வைப்பதால் அவதி
/
மத்துார் ஏரியில் குப்பைக்கு இரவில் தீ வைப்பதால் அவதி
மத்துார் ஏரியில் குப்பைக்கு இரவில் தீ வைப்பதால் அவதி
மத்துார் ஏரியில் குப்பைக்கு இரவில் தீ வைப்பதால் அவதி
ADDED : பிப் 17, 2025 02:27 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துாரில், திருப்பத்துார், கிருஷ்ண
கிரி சாலைகள் மற்றும் ராஜ வீதி, கீழ்வீதி உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, அதேபோல் மத்துாரிலுள்ள கோழி இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை, மத்துார் சின்னஏரியில் கொட்டி வருகின்றனர்.
இந்த குப்பைக்கு நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் ஏற்பட்ட புகையால், மத்துார் பஸ் ஸ்டாண்ட், திருவண்ணா-மலை, தர்மபுரி பிரிவு சாலை மற்றும் மத்துார் குடியிருப்பு பகுதி-களில் புகை பரவியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் மூச்சு திணறலுக்கு ஆளாகி அவதிக்குள்ளாகினர். சம்மந்தப்-பட்ட அதிகாரிகள் ஏரியில் குப்பை கொட்டுவோர் மீது நடவ-டிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.