ADDED : செப் 15, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை:கோவை ஸ்ரீசக்தி பொறியியல் கல்லுாரியில் நடந்த ஆசிரியர் தின விழாவில், ஊத்தங்கரை அடுத்த ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேந்திரனின், சிறந்த கல்வி பணியை பாராட்டி, சக்தி வித்யாபூஷன் எனும் விருது வழங்கப்பட்டது.
இதில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பாலகுருசாமி, எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா, கல்லுாரி தலைவர் தர்மலிங்கம், முதல்வர் ஜெயபிரகாஷ், தாளாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.