/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாவட்ட போட்டிகளில் வெற்றி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
/
மாவட்ட போட்டிகளில் வெற்றி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
மாவட்ட போட்டிகளில் வெற்றி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
மாவட்ட போட்டிகளில் வெற்றி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
ADDED : மார் 15, 2024 02:35 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
மாவட்டத்தில், 250க்கும் மேற்பட்ட பள்ளிகளில், தேசிய பசுமை படை
செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு,
பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துதல் பற்றி
தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு, சூழலியல் சார்பில், பேச்சு,
கட்டுரை, ஓவியம், வினாடி-வினா போட்டிகள் ஒன்றிய அளவில் கடந்த பிப்.,
26ல் நடந்தது. இதில், 1,200 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய
அளவில், முதல் மூன்று இடம் பிடித்த, மாணவ, மாணவியர், மாவட்ட அளவில்
பிப்., 28ல் நடந்த போட்டிகளில் பங்கேற்றனர். இதில், 180 மாணவ,
மாணவியர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு
பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் மகேந்திரன்
வரவேற்றார். மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட உதவி
திட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேலு மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல்
அலுவலர் தீர்த்தகிரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில்,
ஒன்றிய அளவில் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,
மாணவியருக்கு முதல் பரிசு, 500 ரூபாய், 2ம் பரிசு, 400 ரூபாய், 3ம்
பரிசு, 300 ரூபாய் என, 50,000 ரூபாய் பரிசுகளும், சான்றிதழ் மற்றும்
புத்தகங்களும் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை, மாவட்ட தேசிய பசுமை
படை ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், ஓசூர் கல்வி மாவட்ட தேசிய பசுமை படை
ஒருங்கிணைப்பாளர் பாலாஜி ஆகியோர் செய்திருந்தனர்.

