/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வங்கி சார்பில் விழிப்புணர்வு முகாம்
/
வங்கி சார்பில் விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 23, 2025 01:23 AM
கிருஷ்ணகிரி இந்திய அரசின் நிதி சேவை துறை மற்றும் இந்தியன் முன்னோடி வங்கி இணைந்து, நாடு முழுவதும் ஜூலை 1 முதல் செப்., 30 வரை, 2.7 லட்சம் விழிப்புணர்வு முகாம்களை நடத்தவும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 333 பஞ்சாயத்துகளில் முகாம் நடத்தவும்
தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 198-வது முகாம் சூளகிரி மற்றும் குந்தாரப்
பள்ளியில் நடந்தது.
இந்திய ரிசர்வ் வங்கி சென்னை பிராந்திய இயக்குனர் உமாசங்கர், இந்திய ரிசர்வ் வங்கி சென்னை பொது மேலாளர் ராஜ்குமார், இந்தியன் வங்கி தர்மபுரி மண்டல மேலாளர் கோவிந்தராஜு, தமிழ்நாடு கிராம வங்கி பிராந்திய மேலாளர் ஹேமலதா உள்பட பலர் பங்கேற்றனர்.
முகாம்களில், மத்திய அரசின் ஜீரோ பேலன்ஸ் கணக்கு துவக்கம், அதன் மூலம், 2 லட்சம் ரூபாய் இலவச காப்பீடு, இலவச பற்று அட்டை மற்றும் ஆண்டுக்கு, 436 ரூபாய் பிரீமியத்தில், 2 லட்சம் ஆயுள் காப்பீடு திட்டம், 20 ரூபாய் பிரிமியத்தில், 2 லட்சம் விபத்து காப்பீடு திட்டம், மாதம், 1,000 முதல், 5,000 ரூபாய் வரை உத்திரவாத ஓய்வூதிய, அடல் ஓய்வூதிய யோஜனா திட்டம் குறித்து விளக்கப்பட்டது. மேலும், டிஜிட்டல் மோசடிகளில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.