/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அதியமான் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
அதியமான் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 20, 2025 07:09 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்-லுாரியின் தெருநாய் மேலாண்மை கிளப் மற்றும் தேசிய நலப்-பணி திட்ட பிரிவு ஆகியவை சார்பில், தெரியாத நாய்களிடமி-ருந்து விடுதலை என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்-தது.
கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவ-மனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் ராஜன் ருஷேந்தர், தெருநாய் பிரச்னைகளுக்கான காரணங்கள், விளைவுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தெளிவாக விளக்கி கூறினார்.
பொதுமக்களின் பாதுகாப்பு, சுகாதார விழிப்புணர்வு மற்றும் விலங்குகளின் நெறிமுறை சிகிச்சை குறித்து, மாணவ, மாணவி-யருக்கு விளக்கப்பட்டது. ஏற்பாடுகளை, ராஜேந்திர பாபு மற்றும் என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் செய்திருந்தனர்.

