ADDED : ஆக 12, 2026 04:53 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில் குருபரப்பள்ளியில் நேற்று,
சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மாவட்ட எஸ்.பி.,
அனிதா கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இதில் குருபரப்பள்ளி
சிப்காட்டில் இயங்கி வரும் டெல்டா நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும்
தனியார் கல்லுாரி மாணவர்கள் உள்பட, 500க்கும் மேற்பட்டோர்
விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர்.
சிப்காட்டில் உள்ள டெல்டா நிறுவனத்தில் துவங்கிய பேரணி,
குருபரப்பள்ளி மேம்பாலம் அருகே நிறைவடைந்தது.
