/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொருட்கள் பார்சல் செய்வதை தவிர்க்க விழிப்புணர்வு
/
பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொருட்கள் பார்சல் செய்வதை தவிர்க்க விழிப்புணர்வு
பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொருட்கள் பார்சல் செய்வதை தவிர்க்க விழிப்புணர்வு
பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொருட்கள் பார்சல் செய்வதை தவிர்க்க விழிப்புணர்வு
ADDED : ஜன 30, 2026 04:49 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், பழைய கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டட அரங்கில், பிளாஸ்டிக் கவர்-களில் உணவு பொருட்களை பார்சல் செய்து தருவதை தவிர்க்க வலியுறுத்தி, விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தர்மபுரி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்றார். மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறி-யாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கைலாஷ்குமார் தலைமை வகித்து பேசி-யதாவது: தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கவர்களில், சூடான டீ, காபி, பால் உள்ளிட்டவற்-றுடன் சாம்பார், ரசம் உள்ளிட்ட திரவப் பொருட்களை பார்சல் செய்து தருவதால், பிளாஸ்டிக்கில் உள்ள மைக்ரோ நுண் துகள்-களால் நுகர்வோருக்கு நுரையீரல் மட்டுமின்றி மலட்டுத்-தன்மை, கர்ப்பிணிகளுக்கு கரு கலைதல், பிறக்கும் குழந்தைக-ளுக்கு பிறவி குறைபாடுகள் மற்றும் பெரியோருக்கு கேன்சர் உள்-ளிட்டுவை ஏற்பட காரணமாகிறது. எனவே, இதை முற்றிலும் தவிர்க்க கடை உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். பார்சல் வாங்க வரும் நுகர்வோரிடம் பாத்திரம், பிளாஸ்க் மற்றும் கொள்க-லன்கள் எடுத்து வந்து வாங்கிச் செல்ல அறிவுறுத்தி, அவ்வாறு கொண்டு வருபவர்களுக்கு சலுகை அளிக்கும் விதமாக, மொத்த விற்பனை தொகையில், 5 முதல், 10 சதவீதம் சலுகை தர-வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

