ADDED : ஜன 20, 2025 06:51 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பல்லேரிப்பள்ளி கிராமத்தில், சமூக ஆர்வலர்கள் சார்பில், போலீஸ்துறை மூலம் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.
அதில், இளைஞர்கள் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவது, குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது, ஆங்காங்கே சாலையோரம், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பெரிய அளவிலான பேனர்களை வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என, அதில் வலியுறுத்தப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமையேற்று, குருபரப்பள்ளி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எச்சரிக்கை பலகையை திறந்து வைத்து, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் துாய்மை பணியாளர்களுக்கு, புத்தாடை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.