/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அறிஞர் அண்ணா கல்லுாரியில் ஆயுத பூஜை கொண்டாட்டம்
/
அறிஞர் அண்ணா கல்லுாரியில் ஆயுத பூஜை கொண்டாட்டம்
ADDED : அக் 04, 2025 01:14 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.
கல்லுாரி நிறுவனரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான தம்பிதுரை பேசுகையில்,'' மாணவர்களின் நலனை மையமாக கொண்டு, கல்லுாரி பேராசிரியர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். கல்லுாரி பஸ் ஓட்டுனர்கள் எப்போதும் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும்,'' என்றார்.
கல்லுாரி தாளாளர் கூத்தரசன் முன்னிலை வகித்தார். முதல்வர் தனபால் வாழ்த்தி பேசினார். விழாவில், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், கல்லுாரி பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள், அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர். கல்லுாரி நிறுவனர், அனைவருக்கும் ஆயுத பூஜை வாழ்த்துகளைத் தெரிவித்து, இனிப்பு வழங்கினார்.