/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிறந்த 2 மணி நேரத்தில் பெண் சிசு புதரில் வீச்சு
/
பிறந்த 2 மணி நேரத்தில் பெண் சிசு புதரில் வீச்சு
ADDED : மார் 05, 2025 08:27 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்துாரில், திருப்பத்துார் நெடுஞ்சாலை மத்துார்பதியில், ஜெயக்குமாரின் விவசாய நிலம் உள்ளது. அங்குள்ள புதரில், பிறந்து, பெண் சிசுவை தொப்புள் கொடியுடன் நேற்று காலை கிடந்தது. ஆங்காங்கே எறும்பு கடித்து கண், உதடு, கை, கால்கள் வீங்கியிருந்தன. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சிசுவை மீட்டு, மத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு முதலுதவி சிகிச்சையளித்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிசு அனுப்பி வைக்கப்பட்டது. பிறந்து இரண்டு மணி நேரமே ஆகியிருக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். சிசுவை வீசி சென்றது யார் என்பது குறித்து, மத்துார் போலீசார் 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். 'பெண் சிசு தற்போது நன்றாக உள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அரசு தொட்டில் மையத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.