/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கருணாநிதி பிறந்தநாளையொட்டி இறகுபந்து விளையாட்டு போட்டி
/
கருணாநிதி பிறந்தநாளையொட்டி இறகுபந்து விளையாட்டு போட்டி
கருணாநிதி பிறந்தநாளையொட்டி இறகுபந்து விளையாட்டு போட்டி
கருணாநிதி பிறந்தநாளையொட்டி இறகுபந்து விளையாட்டு போட்டி
ADDED : ஜூலை 29, 2025 01:25 AM
கிருஷ்ணகிரி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, கிருஷ்ணகிரியில் இறகுப்பந்து விளையாட்டு போட்டிகள் நடந்தன.
கிருஷ்ணகிரி நகர, தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி இறகுப்பந்து விளையாட்டு போட்டிகள் நடந்தன. கிருஷ்ணகிரி நகராட்சி கவுன்சிலர் பாலாஜி தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி, தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி ஆகியோர்
போட்டிகளை துவக்கி வைத்தனர்.
இந்த போட்டியில் மொத்தம், 42 அணிகள் பங்கேற்றன. தகுதி சுற்று அடிப்படையில் நடந்த, இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக, 10,000 ரூபாய் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக, 7,000 ரூபாய், 3ம் பரிசாக, 4,000 ரூபாய் வழங்கப்பட்டது. நகராட்சி துணைத்தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.