ADDED : நவ 23, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சாமியாபுரம் கூட்ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில், தர்மபுரி மாவட்ட பாக்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், தொழில்நுட்ப பயிற்சி மற்றும் கருத்தரங்கம் மாவட்ட தலைவர் வஞ்சி தலைமையில் நடந்தது.
மாவட்ட வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனை துணை இயக்குனர் இளங்கோவன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பாத்திமா ஆகியோர் பாக்கு உற்பத்தி குறித்து பேசினர். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் ஏற்படுத்தி, பாக்கு கொள்முதல் செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

