/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
திரவ நைட்ரஜனில் தயாரிக்கும் உணவு பொருளை விற்க தடை விதிக்கலாமே
/
திரவ நைட்ரஜனில் தயாரிக்கும் உணவு பொருளை விற்க தடை விதிக்கலாமே
திரவ நைட்ரஜனில் தயாரிக்கும் உணவு பொருளை விற்க தடை விதிக்கலாமே
திரவ நைட்ரஜனில் தயாரிக்கும் உணவு பொருளை விற்க தடை விதிக்கலாமே
ADDED : ஏப் 27, 2024 06:50 AM
கிருஷ்ணகிரி : நுகர்வோர் விழிப்புணர்வு நலச்சங்க மாநில தலைவர் ஜாய் வெளியிட்டுள்ள அறிக்கை:
திரவ நைட்ரஜன் உயிருக்கு ஆப த்தை விளைவிக்கும் தன்மையுடடைது. உணவுகள், 36 டிகிரி வெப்ப நிலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், நைட்ரஜனில் ஊறவைத்த பிஸ்கட், ஐஸ்கிரீம், வேபர் உணவு வகைகள், திரவ நைட்ரஜன் பிஸ்கட் போன்றவை, 100 டிகிரி நைட்ரஜன் கொண்ட உறைந்த நிலையில் தயாரிக்கப்படுகின்றன. உணவுகளை அதிக குறைவான வெப்ப நிலையில் வைத்து விற்பனை செய்கின்றனர். இதனை உட்கொண்டால் வாயில் புண் ஏற்படும் என ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
திரவ நைட்ரஜன் மணமற்றது, நிறமற்றது மற்றும் சுவையற்றது. திரவ நைட்ரஜனை ஆய்வுக்கூடம் மற்றும் தொழில் துறையில் பயிற்சி பெற்ற நபர்கள் மட்டுமே கையாள வேண்டும். ஆனால் தற்போது இன்று பல பெட்டிக்கடைகள், உணவுக்கடைகள் மற்றும் மால்களில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் திரவ நைட்ரஜன் உணவை கையாள்வது பல விபத்துக்களுக்கு வழி வகுக்கிறது. எனவே திரவ நைட்ரஜன் உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

