/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
/
வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
ADDED : நவ 27, 2024 02:24 AM
ஓசூர்:ஆனைக்கல் அருகே, கனரா வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து மர்மகும்பல் கொள்ளையடிக்க முயற்சித்து முடியாததால், அதிலிருந்த, 10 லட்சம் ரூபாய் தப்பியது.
கர்நாடகா மாநில எல்லையான ஆனைக்கல் அருகே மஞ்சனஹள்ளியில், கனரா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது.
இங்கு நேற்று முன்தினம் அதிகாலை நுழைந்த மர்ம கும்பல், ஏ.டி.எம்., இயந்திரத்தை பெயர்த்து, அருகிலுள்ள தைல தோப்பிற்குள் கொண்டு சென்றது. அங்கு, அதை ஆக்சா பிளேடால் அறுத்து, பணத்தை கொள்ளையடிக்க முயன்றது. ஆனால், நீண்ட நேரமாக முயற்சித்தும், ஏ.டி.எம்., இயந்திரத்தை அறுக்கவோ, உடைக்கவோ முடியவில்லை.
காலையில், அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமானதால் பயந்த அக்கும்பல், ஏ.டி.எம்., இயந்திரத்தை அப்படியே விட்டு விட்டு தப்பியது. தைல மர தோப்பிற்குள் ஏ.டி.எம்., இயந்திரம் கிடப்பதை பார்த்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அத்திப்பள்ளி போலீசார் அதை கைப்பற்றி, விசாரிக்கின்றனர். கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்ததால், ஏ.டி.எம்., இயந்திரத்தில் இருந்த, 10 லட்சம் ரூபாய் தப்பியது.