sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 31, 2025 06:22 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி இந்தியன் வங்கி முன்பு, அகில இந்திய வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கூட்ட-மைப்பு சார்பில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

அகில இந்திய பொது செயலாளர் ஹரிராவ் தலைமை வகித்தார். வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜசேகர், அகில இந்-திய வங்கி ஊழியர் சங்க செயற்குழு உறுப்பினர் அசோக்குமார், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனம் செயற்குழு உறுப்பினர் தினேஷ் ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், வாரத்தில், 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும். தனியார் மய கொள்கையையும், பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும். ஐ.டி.பி.ஐ., வங்கியின் பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்கக்-கூடாது. தற்காலிக ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

வங்கி கிளைகளில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள், பெண் ஊழியர்களுக்கு பணி பாது-காப்பு வழங்க வேண்டும். ஊழியர்கள், அதிகாரிக-ளுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு, வருமான வரி பிடிக்கக்கூடாது. இறந்த ஊழியர்களின், வாரி-சுகளுக்கு வேலை வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us