ADDED : அக் 01, 2024 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வங்கி மேலாளர் மர்மச்சாவு
ஓசூர், அக். 1-
கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், 29. ஓசூர், சதாசிவம் காலனியில் வாடகை வீட்டில் தங்கி, எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்சின், 2வது கிளையில், டெவலப்மென்ட் மேலாளராக பணியாற்றி வந்தார்; இவரது தாய் ஜோதிலட்சுமி நேற்று முன்தினம் போன் செய்த போது எடுக்காததால், அருகில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்கள் சென்று ராஜ்குமாரை பலமுறை அழைத்தும் கதவை திறக்கவில்லை. ஹட்கோ போலீசார் சம்பவ இடம் சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, வாயில் நுரை தள்ளிய நிலையில் ராஜ்குமார் இறந்து கிடந்தார். சடலத்தை மீட்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர்.