/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மழையின்றி வறண்ட தரிசல் நிலம் ; கால்நடை விவசாயிகள் கவலை
/
மழையின்றி வறண்ட தரிசல் நிலம் ; கால்நடை விவசாயிகள் கவலை
மழையின்றி வறண்ட தரிசல் நிலம் ; கால்நடை விவசாயிகள் கவலை
மழையின்றி வறண்ட தரிசல் நிலம் ; கால்நடை விவசாயிகள் கவலை
ADDED : மார் 22, 2024 07:12 AM
போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, மத்துார் சுற்று வட்டார பகுதிகளில், 25,000க்கும் மேற்பட்ட கால்நடை விவசாயிகள், விவசாயம் செய்து வருவதுடன் கூடுதலாக கறவை மாடுகள், ஆடு, கோழி வைத்து பராமரித்து வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மழையின்றி கடும் வறட்சியால், விவசாய விளைநிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் வறண்டு தரிசாக காணப்படுகிறது.
இதனால் போச்சம்பள்ளி, மத்துார் சுற்று வட்டார பகுதியிலுள்ள விவசாயிகள் கால்நடைகளை, தரிசாக உள்ள நிலங்களில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதுடன், கால்நடைகளை காப்பாற்ற வைக்கோல் புல்களை ஒரு பண்டல், 300 முதல், 400 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி, காப்பாற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு சில விவசாயிகள், கடும் வறட்சியால் வேறு வழியின்றி கால்நடைகளை பராமரிக்க முடியாமல் விற்று வருகின்றனர்.