ADDED : ஜூலை 01, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
சூளகிரி:சூளகிரி
அருகே, கோனேரிப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
இயங்குகிறது.
இங்கு ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் மாணவ,
மாணவியரின் கற்றல் திறனை மேம்படுத்தவும், அடிப்படை வசதிகளை
பூர்த்தி செய்யும் வகையிலும், சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம்,
தங்களது சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, 6 லட்சம் ரூபாய்
மதிப்பில், பல்வேறு உதவிகளை வழங்கியது.குறிப்பாக, மாணவர்களின்
நவீன கற்றல் முறைக்கு உதவும் வகையில், அதிநவீன டிஜிட்டல் தொலைக்காட்சி
வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அமர்ந்து, கல்வி பயில வசதியாக புதிய
மேஜைகள், நவீன வசதிகளுடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு மையம்
ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை பள்ளிக்கு முழுமையாக
ஒப்படைக்கப்பட்டன.
