ADDED : ஜூன் 12, 2026 04:31 AM
அ நிறம் | அளவு
ஓசூர்; தேன்கனிக்கோட்டை, அண்ணா நகரை சேர்ந்-தவர் பாபு, 48, டிரைவர். அதே பகுதியை சேர்ந்த உறவினர் தியாகராஜன், 22, கூலித்தொழிலாளி. தியாகராஜனிடம், பாபு கடந்த ஒன்றரை ஆண்டுக-ளுக்கு முன், 50,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
அதை திருப்பித்தரவில்லை. இந்நிலையில் கடந்த, 8ல், பாபு வீட்டுக்கு சென்ற தியாகராஜன், பணத்தை கேட்டுள்ளார். சிறிது கால அவகாசம் கேட்ட பாபுவிடம், 'பணத்தை தராமல் ஏமாற்ற பார்க்கிறாயா' எனக்-கூறி உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். படு-காயமடைந்த பாபு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார், தியா-கராஜன் மீது வழக்குப்
பதிந்து விசாரிக்கின்றனர்.
