/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டிராக்டர் மீது பைக் மோதி வாலிபர் பலி
/
டிராக்டர் மீது பைக் மோதி வாலிபர் பலி
ADDED : ஏப் 27, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மேட்டு சூளகரையை சேர்ந்தவர் மேகநாதன், 28.
அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் அஜித்குமார், 28. இருவரும் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு ஹீரோ பேசன் புரோ பைக்கில், சிப்காட் பகுதியில் போச்சம்பள்ளி நோக்கி சென்றனர். அப்போது, எதிரில் மடத்தானுாரை சேர்ந்த மணிவேல், 45, என்பவர் டிராக்டரில் செங்கல் ஏற்றிக்கொண்டு வந்தபோது நேருக்கு நேர் மோதினர். இதில் மேகநாதன் சம்பவ இடத்தில் பலியானார். காயமடைந்த அஜித்குமார், போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

