நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் சமியுல்லா, 42. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்.
இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, வீட்டின் முன் தன் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கை நிறுத்தியிருந்தார். திடீரென பைக் தீப்பிடித்து எரிந்து நாசமானது. சமியுல்லா கொடுத்த புகார்படி, சூளகிரி போலீசார் வழக்குப்பதிந்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.