/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பணத்தகராறில் இருதரப்பினர் தாக்குதல்; 3 பேருக்கு 'காப்பு'
/
பணத்தகராறில் இருதரப்பினர் தாக்குதல்; 3 பேருக்கு 'காப்பு'
பணத்தகராறில் இருதரப்பினர் தாக்குதல்; 3 பேருக்கு 'காப்பு'
பணத்தகராறில் இருதரப்பினர் தாக்குதல்; 3 பேருக்கு 'காப்பு'
ADDED : நவ 03, 2024 01:28 AM
ஓசூர், நவ. 3-
ஓசூர், இமாம்படாவை சேர்ந்தவர் முஜாமில், 35. இவரது அண்ணி நுார் நிஷாபேகம், 40, என்பவருக்கும், ஓசூர் பழைய டெம்பிள் ஹட்கோ நீலமேக நகரை சேர்ந்த சலீம் மனைவி சுபைதா, 39, என்பவருக்கும், ஏலச்சீட்டில் பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு முஜாமில், அவரது அண்ணி நுார்நிஷாபேகம் மற்றும் அண்ணன் பைரோஜ் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு வந்த சுபைதா மற்றும் அவரது தரப்பினர், பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறில் ஈடுபட்டு, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் காயமடைந்த முஜாமில் புகார்படி, சுபைதா, அவரது மகன்கள் முதசீர், 19, முஜமில், 25, தின்னுாரை சேர்ந்த பரத், 23, அஜித், 25, மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்த ஓசூர் டவுன் போலீசார், முதசீர், பரத், அஜித் ஆகிய, 3 பேரை நேற்று கைது செய்தனர். அதேபோல், தன்னையும், தன் தரப்பினரையும் தாக்கி, கார் கண்ணாடியை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக, டவுன் போலீசில் சுபைதா புகார் செய்தார். அதன்படி, நுார் நிஷாபேகம், முஜாமில், பைரோஜ், சவுகத்பேக், ஜியாவுல்லா மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.