/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பா.ஜ., சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாட்டம்
/
பா.ஜ., சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : டிச 28, 2024 02:58 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், குந்தாரப்பள்ளி மேம்பாலம் அருகில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின், 100வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட பொதுச் செயலாளர் அன்பரசன் பேசுகையில், ''வாஜ்பாய் தங்க நாற்கர சாலை, எளிமையான, ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்தவர். முன்னாள் பிரதமர் நேருவால் பாராட்டு பெற்றவர். அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான ஆட்சியைக் கொடுத்து உலகையே மிரள வைத்த அணுகுண்டு சோதனையை நடத்தியவர்,'' என்றார். ஒன்றிய தலைவர் ஸ்ரீராமுலு, வேப்பனஹள்ளி மல்லப்பன், அரசு தொடர்பு துறை மாவட்ட தலைவர் லட்சுமிபதி, செயலாளர் கோவிந்தராஜ், இளைஞர் அணி துணை தலைவர் லிங்கன், ஒன்-றிய பொதுச் செயலாளர் தங்கராஜ், செந்தில்குமார், முருகன், மல்-லப்பன், சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

