ADDED : ஏப் 07, 2024 03:55 AM
கிருஷ்ணகிரி: கடந்த, 1951ம் ஆண்டில், ஷியாமா பிரசாத் முகர்ஜி ஜனசங்கத்தை தோற்றுவித்தார். 1980 ஏப்., 6ல் இவை பாரதிய ஜனதா கட்சியாக மாற்றம் செய்யப்பட்டது. இந்த அமைப்பு துவங்கப்பட்ட இந்த நாளை ஆண்டுதோறும், பா.ஜ., தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது. அதன்படி, பா.ஜ., கட்சியின், 43வது ஸ்தாபன நாளை முன்னிட்டு, நேற்று கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளியில் உள்ள கிழக்கு மாவட்ட, பா.ஜ., கட்சி அலுவலகத்தில், கிழக்கு மாவட்ட தலைவர் சிவபிரகாஷ் தலைமையில், ஷியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் படங்களுக்கு, மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், லோக்சபா இணை ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், லோக்சபா பார்வையாளர் கோபிநாத், முன்னாள் மாவட்ட தலைவர் தர்மலிங்கம், கிருஷ்ணகிரி சட்டசபை பொறுப்பாளர் கவியரசு, மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தராஜூ, சட்டசபை இணை பொறுப்பாளர் விமலா, அகில இந்திய ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் முனவரி பேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

