/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'மக்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை முழுமையாக வழங்கியது பா.ஜ., அரசு'
/
'மக்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை முழுமையாக வழங்கியது பா.ஜ., அரசு'
'மக்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை முழுமையாக வழங்கியது பா.ஜ., அரசு'
'மக்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை முழுமையாக வழங்கியது பா.ஜ., அரசு'
ADDED : ஏப் 07, 2024 03:23 AM
கிருஷ்ணகிரி: ''மக்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை முழுமையாக வழங்கியது, பா.ஜ., அரசு தான்,'' என, கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளர் நரசிம்மன் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 32 கிராமங்களில் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளர் நரசிம்மன் ஓட்டு சேகரித்து பேசியதாவது:
உலகளவில் இந்தியாவை முன்னேற்றி சிறப்பான திட்டங்களை கொடுத்தது மத்திய, பா.ஜ., அரசும் பிரதமர் மோடியும் தான். தமிழத்தில் ரேஷன்கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் முதல், குடிநீர், வேளாண் திட்டங்கள், தொழில்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் வழங்குவது மத்திய பா.ஜ., அரசு. தமிழகத்தில், கடந்த, 5 ஆண்டுகளில் மட்டும் மேம்பாலங்கள், மருத்துவக் கல்லுாரிகள், ஏழைகளுக்கான பிரதமர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வாரி வாரி வழங்கியவர் பிரதமர் மோடி.
அதை புரிந்து கொண்டதால் தான் தமிழகத்தில், பா.ஜ., ஜெட் வேகத்தில் வளர்கிறது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின், 'என் மண், என் மக்கள்' நடைபயணத்திற்கு பின், தமிழகத்தில், பா.ஜ., எழுச்சி கண்டுள்ளது. நமக்கு தோளோடு, தோள் கொடுக்க, பா.ம.க.,வும் இணைந்துள்ளது. கிருஷ்ணகிரி தொகுதியில், நான் வெற்றி பெற்று வந்தால் உங்களோடு, உங்களில் ஒருவனாக, நண்பனாக இருந்து மக்கள் பணிகளை செய்வேன்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கிருஷ்ணகிரி, பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் சிவபிரகாஷ், மாவட்ட செயலாளரும், வேப்பனஹள்ளி தொகுதி பொறுப்பாளருமான அன்பரசன் மற்றும் பா.ம.க., உள்ளிட்ட கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

