ADDED : பிப் 10, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவி, ஆசிரியர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், ஆசிரியர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் பள்ளி மாணவிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் கவியரசு தலைமையில், போச்சம்பள்ளி நான்கு ரோடு சந்திப்பில், நேற்று 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.