தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பா.ஜ., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்

பா.ஜ., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்

பா.ஜ., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்


ADDED : நவ 09, 2025 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2025 03:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., கட்சியின், ஓசூர் சட்ட-சபை தொகுதி ஓட்டுச்சாவடி முகவர்கள் பயிலரங்கம் மற்றும் ஆலோசனை கூட்டம், பவானி பேலஸ் மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன், மாநில செயற்-குழு உறுப்பினர் நாகராஜ், மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன் முன்னிலை வகித்தனர்.

மாநில தொழில் பிரிவு தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து பேசும்போது, ''எஸ்.ஐ.ஆரை பார்த்து, தி.மு.க., பயப்ப-டுகிறது,'' என்றார்.

மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் பேசும்போது, ''தமிழ-கத்தில் தாமரை மலர வேண்டும். சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைக்கு பயப்படும் ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான். உண்மையான வாக்குரிமை இருப்பவர்களுக்கு அதை பெற்றுத்தர வேண்டும். தகுதியற்ற வாக்காளர்களை நீக்க வேண்டும். இது தான், எஸ்.ஐ.ஆர்., நோக்கமாகும்,'' என்றார்.

* ஊத்தங்கரையில், பா.ஜ., கட்சியின், 2026ம் ஆண்டு சட்ட-சபை தொகுதி ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக்-கூட்டம் நேற்று நடந்தது. ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் சங்கர் தலைமை வகித்தார். தொகுதி இணை அமைப்பாளர் சிவக்குமார், தொகுதி பொறுப்பாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் ஆடிட்டர் மகாராஜன், தாமோதரன், கார்த்திகேயன், வெங்-கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us