ADDED : பிப் 19, 2026 05:36 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., கட்சி பட்டியல் அணி சார்பில், ஓசூர் ஒன்றிய அலுவலகம் அருகே, தி.மு.க., அரசை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பட்டியல் அணி மாவட்ட தலைவர் சுரேஷ், பொதுச்செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தனர். தொழில் பிரிவு மாநில தலைவர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ், பா.ம.க., மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை, தமிழகத்தில், தி.மு.க., அரசு மற்ற திட்டங்களுக்கு திருப்பியதாகவும், இட ஒதுக்கீடு உரிமைகளை மதிக்காமல் ஆட்சி நடத்துவதாகவும் குற்றம் சாட்டி, கோஷங்களை எழுப்பினர். பா.ஜ., முன்னாள் மாவட்ட செயலாளர் பிரவீன்குமார், விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் கிஷோர், மண்டல தலைவர் மணிகண்டன், பா.ம.க., மாநில இளைஞரணி துணைத்தலைவர் சரவணன், செயற்குழு உறுப்பினர் சொக்கலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
* கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, கிழக்கு மாவட்ட, பா.ஜ., பட்டியல் அணி சார்பில், தி.மு.க., அரசை கண்டித்து நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். இதில், அ.தி.மு.க., நகர செயலாளர் கேசவன், பா.ம.க., மாவட்ட செயலாளர் மோகன்ராம், பா.ஜ., நகர தலைவர் விமலா, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.
