/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று பா.ஜ., பொதுக்கூட்டம்
/
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று பா.ஜ., பொதுக்கூட்டம்
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று பா.ஜ., பொதுக்கூட்டம்
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று பா.ஜ., பொதுக்கூட்டம்
ADDED : ஜூலை 31, 2024 07:20 AM
கிருஷ்ணகிரி: லோக்சபா தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம், மேற்கு மாவட்ட, பா.ஜ., சார்பில், வேப்பனஹள்ளியில் இன்று நடக்கிறது.இது குறித்து, மேற்கு மாவட்ட, பா.ஜ., பொதுச்செயலாளர் அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,விற்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து இன்று (ஜூலை, 31) மாலை, 5:00 மணிக்கு, வேப்பனஹள்ளி காந்தி சிலை அருகில், மாவட்ட பொதுச்செயலாளர் அன்பரசன் தலைமையில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில், மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன், மாவட்ட பார்வையாளர் நரசிம்மன், மாநில துணைத் தலைவர் நரேந்திரன், மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் முனிராஜ் உள்பட பல்வேறு பொறுப்பாளர்கள் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து பேச உள்ளனர்.
எனவே, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தேர்தல் களத்தில் தங்களது அயராத உழைப்பை வழங்கிய, கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், மண்டல் நிர்வாகிகள், சக்திகேந்திர பொறுப்பாளர்கள், கிளை தலைவர்கள், கட்சி தொண்டர்கள், ஹிந்து இயக்க நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரும், திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

