தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ புத்தக கடையில் திருடியவர் கைது

புத்தக கடையில் திருடியவர் கைது

புத்தக கடையில் திருடியவர் கைது


ADDED : டிச 11, 2024 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2024 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புத்தக கடையில் திருடியவர் கைது

தர்மபுரி, டிச. 11-

நல்லம்பள்ளி வாணியர் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார், 50. இவர் நல்லம்பள்ளியில் புக் ஸ்டோர் நடத்தி வந்தார். கடந்த, 6 இரவு அவரது புக் ஸ்டோரின் பூட்டை உடைத்து, கடையிலிருந்த, 20,000 ரூபாய் மற்றும் 'சிசிடிவி' காட்சிகள் பதிவான கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் ஆகியவை, திருடு போனது. புகார் படி, அதியமான்கோட்டை போலீசார், அப்பகுதியில் பதிவான, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து, குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், மேட்டுக்கரையை சேர்ந்த, சலுான் கடை உரிமையாளர் ராஜா, 28 என்பவரை, நேற்று கைது செய்தனர். விசாரணையில், சம்பவத்தன்று நல்லம்பள்ளியில் உறவினர் வீட்டுக்கு வந்தபோது, செலவிற்கு பணம் இல்லாததால், புக் ஸ்டோரில் திருடியதை ராஜா ஒப்புக்கொண்டார். மேலும், போலீசில் பிடிபடாமல் இருக்க, 'சிசிடிவி' காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்கை சேர்த்து திருடி சென்றதாக தெரிவித்தார். திருட்டுக்கு பயன்படுத்திய மாருதி சுசுகி காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us