/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்
/
துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்
ADDED : பிப் 10, 2026 05:55 AM

கிருஷ்ணகிரி: திருவள்ளூர் மாவட்டம், போலிவாக்கத்தில் நேற்று மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் டவுன் பஞ்.,களில் பணிபுரியும் துாய்மை பணி-யாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்-டத்தை விரிவுபடுத்தி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, கிருஷ்ணகிரி நகராட்சி துாய்மை பணியாளர்க-ளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினர். கிருஷ்ணகிரி நகராட்சியில் பணிபுரியும், 330 துாய்மை பணியாளர்கள், ஊழியர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர்.இது குறித்து, கலெக்டர் தினேஷ்குமார் கூறியதா-வது:
மாவட்டத்தில் இத்திட்டத்தில், ஓசூர் மாநகராட்சி யில், 1,354 துாய்மை பணியாளர்கள், கிருஷ்ண-கிரி நகராட்சி - 330, பர்கூர் டவுன் பஞ், - 66, தேன்-கனிக்கோட்டை டவுன் பஞ்., - 87, காவேரிப்பட்-டணம் டவுன் பஞ்., - 52, கெலமங்கலம் டவுன் பஞ்., - 43 நாகோஜனஹள்ளி டவுன் பஞ்., - 33 மற்றும் ஊத்தங்கரை டவுன் பஞ்.,ல், 63 பேர் என, மாவட்டம் முழுவதும், 2,028 துாய்மை பணியா-ளர்கள் பயனடைவர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் சதீஷ்குமார், துணை தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலு-மணி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* ஓசூர் கே.ஏ.பி., திருமண மண்டபத்தில், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகா-தார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா மற்றும் கவுன்சி-லர்கள் குத்துவிளக்கேற்றி வைத்தனர். தொடர்ந்து, துாய்மை பணியாளர்களுக்கு, காலை உணவுகளை பரிமாறி, அவர்
களுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.
மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், மாநகர அலுவலர் அஜிதா, மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர்கள் மோசின்தாஜ், ராதா, லட்சுமி, பெருமாயி உட்பட பலர்
பங்கேற்றனர்.
* ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி தலைவர் அமானுல்லா தலைமை வகித்தார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், திட்டப் பணிகள் பொறி-யாளர் வினோத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

