காலை உணவு திட்டம் விரிவாக்கம் சமையலர்களுக்கு 2 நாள் பயிற்சி
காலை உணவு திட்டம் விரிவாக்கம் சமையலர்களுக்கு 2 நாள் பயிற்சி
ADDED : செப் 13, 2026 02:09 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தேர்நிலையம், ராசிவீதி அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் மைய சமையல் கூடத்தில், தமிழ்நாடு வாணிபக் கழக நிர்-வாக இயக்குனர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் காமராஜர் காலை உணவு திட்ட குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் தினேஷ் குமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிர-பாகர் சதீஷ் பேசியதாவது: கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க, உணவு சமைக்கும் கூட-மான, ராசிவீதி அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் மைய சமையல் கூடத்தில், உணவு பொருட்கள் மற்றும் மாதிரி உணவு சமைக்கப்பட்டதை ஆய்வு செய்யப்பட்டது. தற்போது விரிவுபடுத்தப்படும் காமராஜர் காலை உணவு திட்டத்தில், மாவட்-டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊரக பகுதிகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும், 572 பள்ளிகளில், 6 முதல், 8-ம் வகுப்பு வரை பயிலும், 51,413 மாணவ, மாணவியர்க-ளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில், திங்கள், புதன் கிழமைகளில் பொங்கல், செவ்வாய் கிழமையில் ரவா உப்புமா, வியாழக்கிழமையில் சேமியா உப்புமா, வெள்ளிக்-கிழமை கோதுமை உப்புமா வழங்கப்பட உள்ளது. சமையல் செய்யும் பணியாளர்களுக்கு, 2 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டுள்-ளது. சமையல் மையங்களை துாய்மையா கவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட எஸ்.பி., அனிதா, டி.ஆர்.ஓ., மஞ்சளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
