/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் கண்டறியப்பட்ட செங்கல் நடுகல் கோவில்கள்
/
கிருஷ்ணகிரியில் கண்டறியப்பட்ட செங்கல் நடுகல் கோவில்கள்
கிருஷ்ணகிரியில் கண்டறியப்பட்ட செங்கல் நடுகல் கோவில்கள்
கிருஷ்ணகிரியில் கண்டறியப்பட்ட செங்கல் நடுகல் கோவில்கள்
ADDED : டிச 02, 2025 01:14 AM

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே, செங்கல்லில் கட்டப்பட்ட மூன்று நடுகல் கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பட்டகானுாரில், அரிய கட்டட கலையுடன் கூடிய மூன்று நடுகல் கோவில்களை, தொன்மை இயல் குழுவினர் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
தமிழக தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலர் கோவிந்தராஜ் கூறியதாவது:
கற்களை இறந்தவரோடு தொடர்புபடுத்தும் பழக்கம் இருந்ததால், பல்லவர் காலம் தொடங்கிய பின், கல்லை பெருந்தெய்வ கோவில்களுக்கு பயன்படுத்தும் முறை அறிமுகமானது. இக்கோவில் கட்டடக்கலை, ராஜராஜ சோழன் காலத்தில் உச்சத்தை தொட்டது.
இந்த ஊரில், செங்கல்லால் மூன்று நடுகல் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே இங்கு தான் முதன் முறையாக கண்டறியப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட முறைதான், இங்கும் கையாளப்பட்டுள்ளது.
ஒரு நடுகல்லில், இரு பெண்கள் தங்கள் கைகளில் ஒன்றை தெய்வங்களை போன்று தொடை மீது வைத்திருக்கின்றனர். இது, 350 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம். இந்த கோவில், தமிழக நடுகல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது.
இவ்வாறு, அவர் கூறினார்.

