தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 'திட்டங்களை தந்த தி.மு.க.,வை மீண்டும் அரியணை ஏற்றுங்கள்'

'திட்டங்களை தந்த தி.மு.க.,வை மீண்டும் அரியணை ஏற்றுங்கள்'

'திட்டங்களை தந்த தி.மு.க.,வை மீண்டும் அரியணை ஏற்றுங்கள்'


ADDED : ஏப் 08, 2026 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி, தமிழகம் முழுவதும் திருப்தியான திட்டங்களை தந்த, தி.மு.க.,வை மீண்டும் அரியணை ஏற்ற அனைவரும் ஓட்டளிக்க வேண்டும், என மதியழகன் எம்.எல்.ஏ., பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பாரூர், அரசம்பட்டி, கோட்டப்பட்டி, கீழ்குப்பம், செல்லகுட்டப்பட்டி மருதேரி, விளங்காமுடி, வீரமலை போச்சம்பள்ளி, புளியம்பட்டி உள்ளிட்ட பஞ்.,களின், 50 கிராமங்களில் பர்கூர், தி.மு.க., வேட்பாளர் மதியழகன் எம்.எல்.ஏ., நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மக்களிடையே அவர் பேசியதாவது:

தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் செய்த திட்டங்கள் அனைத்து இல்லங்களுக்கும் சென்றுள்ளது. இவரது திட்டங்களை மற்ற மாநிலங்கள் எல்லாம் பின்பற்றுகிறது. தி.மு.க., ஆட்சியை குறை கூறும், பா.ஜ., அவர்கள் ஆளும் மாநிலங்களிலும், தி.மு.க.,வின் திட்டங்களை கொண்டு வருகிறது. தி.மு.க., அரசு திட்டங்களை, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளே வியந்து பார்த்து செல்கிறது.

காலை உணவுத்திட்டம், தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண், மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, இன்னுயிர் காக்கும் - 48, அன்புக்கரங்கள், தாயுமானவர், நான் முதல்வன், மாணவர்களுக்கு லேப்டாப், திட்டங்களுடன் தொகுதிகள் தோறும் பொது திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது உரிமைத்தொகை, 2,000 ரூபாய், 8,000 ரூபாய் கூப்பன் வழங்க உள்ளோம்.

தி.மு.க., அரசின் சாதனைகள், கொடுத்துள்ள வாக்குறுதிகளால் அதிர்ந்துள்ள, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கட்சிகள், தி.மு.க., தலைவர்கள் குறித்து அவதுாறாக பேசுகின்றனர். நாங்களும் அதுபோல பேசி, தரம் தாழ்ந்த அரசியல் செய்யமாட்டோம். தமிழகத்தில் திருப்தியான திட்டங்களை தந்த, தி.மு.க.,வை மீண்டும் அரியணையில் ஏற்ற, அனைவரும் ஓட்டளிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us