/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் போராட்டம்
/
கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் போராட்டம்
ADDED : ஜன 21, 2026 10:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், கறிக்கோழி கூலியை உயர்த்தக்கோரி, மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜூ தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நாராயணன், துணைத்த-லைவர் சொன்னேகவுடா முன்னிலை வகித்தனர்.
மாநில குழு உறுப்பினர் கோபி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகேஷ் ஆகியோர், கோரிக்கை குறித்து விளக்கி பேசினர். தொடர்ந்து, சூளகிரி தாசில்தார் ரமேஷ்-பாபுவிடம், கோரிக்கை அடங்கிய மனுவை வழங்கினர். அதை பெற்றுக்கொண்ட அவர், உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

