/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பைக் மீது பஸ் மோதல்: 2 வாலிபர்கள் பலி
/
பைக் மீது பஸ் மோதல்: 2 வாலிபர்கள் பலி
ADDED : ஜன 27, 2024 04:37 AM
போளூர்: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த புத்துாரை சேர்ந்தவர்கள் சுபாஷ்சந்திரபோஷ், 21, சந்தியா, 18, மோகன், 22, டில்லிபாபு, 23, விண்ணமங்கலத்தை சேர்ந்தவர் குணநந்தினி, 18, வெளியை சேர்ந்தவர் சக்திவேல், 21. இவர்கள் ஆறு பேரும் நண்பர்கள். இவர்கள் அனைவரும், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த பர்வதமலைக்கு கிரிவலம் செல்ல முடிவு செய்து, நேற்று முன்தினம் மாலை, இரண்டு ேஹாண்டா பைக்கில் சென்றனர்.
சுபாஷ் சந்திரபோஷ், சக்திவேல், குணநந்தினி ஆகிய மூன்று பேர் ஒரு பைக்கிலும், மோகன், சந்தியா, டில்லிபாபு ஆகிய மூன்று பேர் மற்றொரு பைக்கிலும் சென்று கொண்டிருந்தனர். போளூர் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, போளூரிலிருந்து செஞ்சி சென்ற தீன் மோட்டார் என்ற தனியார் பஸ், சுபாஷ் சந்திர போஸ், சக்திவேல், குணநந்தினி ஆகியோர் சென்ற பைக் மீது மோதியது.
இதில் பைக்கில் இருந்து மூன்று பேரும் துாக்கி வீசப்பட்டதில், சுபாஷ்சந்திரபோஸ்
சம்பவ இடத்திலேயே பலியானார். சக்திவேல், வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். குணநந்தினி காலில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து, போளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

