/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பஸ் கண்ணாடி உடைப்பு: 2 பேர் கைது
/
பஸ் கண்ணாடி உடைப்பு: 2 பேர் கைது
ADDED : நவ 27, 2025 01:53 AM
சூளகிரி, ஓசூரிலிருந்து சூளகிரி அருகே கொடிதிம்மனஹள்ளி கிராமத்திற்கு, 37ம் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று காலை வழக்கம் போல், 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன், கொடிதிம்மனஹள்ளி நோக்கி பஸ் சென்றது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த ராமலிங்கம், 59, என்பவர் பஸ்சை ஓட்டினார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த பூபால், 34, கண்டக்டராக இருந்தார்.
பஸ், சிம்பல் திராடி - கொடிதிம்மனப்பள்ளி இடையே சாலை வளைவில், காலை, 8:30 மணிக்கு சென்றபோது, எதிரே பைக்கில் வந்த இரு வாலிபர்கள், நிலை
தடுமாறி கீழே சறுக்கி விழுந்தனர். பஸ் டிரைவர் வழி கொடுக்காததால் தான், கீழே விழுந்ததாக கூறி, அவரிடம் வாக்குவாதம் செய்து, பஸ்சின் முன் மற்றும் பின்புற கண்ணாடிகளை கல் வீசி உடைத்து விட்டு தப்பினர். டிரைவர் ராமலிங்கம் புகார் படி, காளிங்கவரத்தை சேர்ந்த திம்மராஜ், 23, மற்றும் மற்றொரு திம்மராஜ், 23, ஆகிய இருவரை, சூளகிரி போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

