ADDED : ஜூலை 18, 2025 01:28 AM
போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம் அடுத்த, பாலேகுளியில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு, காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில் நேற்று கன்று விடும் திருவிழா நடந்தது. இதில் குறிப்பிட்ட துாரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் கன்றுக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசு, 50,000 ரூபாய், 2ம் பரிசு, 35,000 ரூபாய், 3ம் பரிசு, 25,000 ரூபாய் என, 102 பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. திருப்பத்துார், கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த, 350க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்றன.
நிகழ்ச்சியை, பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் துவக்கி வைத்தார். மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், ஒன்றிய செயலாளர் மகேந்திரன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கன்று விடும் விழாவை காண, 1,000க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

