/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'கபீர் புரஸ்கார் விருது' பெற விண்ணப்பிக்க அழைப்பு
/
'கபீர் புரஸ்கார் விருது' பெற விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : டிச 15, 2025 07:23 AM
கிருஷ்ணகிரி: சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசு பணியாளர்கள், 'கபீர் புரஸ்கார் விருது' பெற விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்-கப்பட்டுள்ளது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின், 2026ம் ஆண்டிற்கான, 'கபீர் புரஸ்கார் விருது' ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் குடியரசு தினவிழாவில் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தலா, 20,000, 10,000 மற்றும், 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. சென்னை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதா-ரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், போலீஸ், தீய-ணைப்புத்துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் ஆகியோர் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசு பணியாளர்கள், அரசு பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில், இப்-பதக்கம் பெறலாம்.
இவ்விருது, ஒரு இனம், வகுப்பை சார்ந்தவர்கள், பிற இன வகுப்பை சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்பு கலவ-ரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறை-யிலோ காப்பாற்றியது வெளிப்படையாக தெரி-கையில், அவரது வீரம் மற்றும் மன வலிமையை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. விரு-துக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விபரங்-களை, தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதள முகவரி, http://awards.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதி வாய்ந்-தவர்கள் இன்றைக்குள் (டிச.15) விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

