தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ இலகுரக வாகனம் ஓட்ட பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

இலகுரக வாகனம் ஓட்ட பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

இலகுரக வாகனம் ஓட்ட பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : ஆக 20, 2025 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 01:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி, இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், இலகுரக வாகன ஓட்டுனர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து, இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன, இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் துவங்க, பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தற்போது, 30 நாட்கள் இலவச கார் ஓட்டுனர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு, 5ம் வகுப்பு படித்த, 18 முதல், 45 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் வரும், 22க்குள் நேரில் வந்து இப்பயிற்சிக்கு விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம்.

காலை, 9:30 மணி முதல் மாலை, 5:30 மணி வரை நடக்கும் பயிற்சியில், சீருடை, காலை, மதியம் உணவு, பயிற்சிக்கான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலும், 94422 47921, 90806 76557 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us