/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'சகி' ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
'சகி' ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
'சகி' ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
'சகி' ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : அக் 04, 2025 12:52 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வன்முறையால் பாதிக்கப்பட்ட, பெண்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் புதிய சிறப்பு திட்டம் 'சகி' என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிவதற்கு, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப அலுவலர், வழக்கு அலுவலர்கள், பாதுகாவலர், பன்முக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு வரும், 10க்குள் விண்ணப்பிக்கலாம். அதன்படி மைய நிர்வாகி பணிக்கு சமூகப்பணி, உளவியல் ஆலோசனை அல்லது வளர்ச்சி மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம், 35,000 ரூபாய்.
மூத்த ஆலோசகர் பணியிடத்திற்கு சமூக பணி, உளவியல் ஆலோசனை அல்லது வளர்ச்சி மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.22 ஆயிரம். கணினி அறிவியல் பணியிடத்திற்கு கணினி பொறியியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம், 20,000 ரூபாய்.
வழக்கு அலுவலர்கள் (6 பேர்) பணியிடத்திற்கு சமூக பணியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம், ரூ.18,000. பாதுகாவலர் (2 பேர்) பணியிடத்திற்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம், ரூ.12,000. பன்முக உதவியாளர் (2 பேர்) பணியிடத்திற்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். மாத ஊதியம், ரூ.10,000.
அனைத்து பணிகளுக்கும் முன் அனுபவம் மற்றும் உள்ளூரை சேர்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். மேலும், விண்ணப்பங்கள் வரும், 10 மாலை, 5:00 மணிக்குள் அறை எண், 21 மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கிருஷ்ணகிரி என்ற முகவரியில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.