ADDED : ஜூன் 01, 2026 05:09 AM
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற, 18 வயது முதல், 60 வயது வரை உள்ள உலமாக்க-ளுக்கு புதிய டூவீலர் வாங்க மானியத்தொகை, 50,000 ரூபாய், வழங்கப்படுகிறது. தமிழகத்தி-லுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்
இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்கள் விண்ணப்-பிக்கலாம்.
டூவீலர் வாங்க மானியம் பெற, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தை பெற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே, பயனாளி டூவீலர் வாங்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்-களை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் (ம) சிறுபான்-மையினர் நல அலுவலகங்களில் வருகிற ஜூன், 30க்குள், உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
