UPDATED : நவ 19, 2026 02:34 AM
ADDED : நவ 19, 2026 02:01 AM

கிருஷ்ணகிரி: மீன் வளர்ப்பு குறித்து ஒரு நாள் கட்டண பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என, பாரூர் மீன்வள ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சோமு சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம் புங்கம்பட்டி கிராமம், பாரூரில், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின், வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு இயக்ககத்தின் சார்பில், மீன் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், மீன் வளர்ப்பு விவசாயி களுக்கும் மாநிலம் முழுவதும் பயிற்சி வழங்கி வருகிறது. மேலும், திலேப்பியா மீனில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தரமான மீன் குஞ்சிகளை வழங்கி வருகிறது. தற்போது இங்கு சிவப்பு மற்றும் கிப்ட் திலேப்பியா மீனின் தரமான மீன் குஞ்சுகள் அரசு நிர்ணயித்த விலையில் கிடைக்கின்றன. தற்போது இம்மையத்தில் வரும், 21ம் தேதி மீன்வளர்ப்பு குறித்து, ஒரு நாள் கட்டண பயிற்சி, 300 ரூபாயில் வழங்கப்படுகிறது. பயிற்சியில், குளம் அமைத்தல், குளம் பராமரிப்பு, நன்னீர் மீன் வளர்ப்பு, தீவன தயாரிப்பு மற்றும் மேலாண்மை, நவீன முறையில் மீன் வளர்ப்பு, மீன் வளர்ப்பில் அரசின் நிதி உதவி திட்டங்கள் மற்றும் பல்வேறு செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்படவுள்ளன. விருப்பமுள்ள பயனாளிகள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 90920 86570, 81222 08148, 86758 58384, 81794 62833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
