ADDED : ஏப் 06, 2026 02:52 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம், பெங்களூரு, அல்சூரை சேர்ந்தவர் லுார்து இன்பாண்ட், 35, சமையல் தொழிலாளி. கடந்த, 4ல், இவர், தன் மனைவி ஜெயாஸ மரியா, 26, என்பவருடன் மாருதி ஆல்டோ காரில் வெள்ளக்குட்டை சோதனைச்சாவடி அருகே ஊத்தங்கரை - திருவண்ணாமலை சாலையில் சென்றார். லுார்து இன்பண்டின் தந்தை ஆரோக்கியதாசும் உடன் சென்றுள்ளார்.
மதியம், 12:50 மணியளவில், வெள்ளக்குட்டை அருகே சென்ற-போது, எதிரே வேகமாக வந்த தனியார் பஸ், கார் மீது மோதி-யது. இதில், லுார்து இன்பண்ட் பலியானார்.ஆரோக்கியதாசும், அவரது மருமகன் ஜெயாஸ் மரியாவும் படுகா-யங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்-றனர்.
