/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை கடத்திய கார் டிரைவர் கைது
/
புகையிலை கடத்திய கார் டிரைவர் கைது
ADDED : நவ 23, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புகையிலை கடத்திய கார் டிரைவர் கைது
ஓசூர், நவ. 23-
ஓசூர் சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., மாதப்பன் மற்றும் போலீசார், தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து மதுரைக்கு சென்ற போர்டு காரை நிறுத்தி சோதனை செய்த போது, 64,400 ரூபாய் மதிப்புள்ள, 146 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. இதனால் காரை ஓட்டி வந்த மதுரை மாவட்டம், பெருங்காமநல்லுாரை சேர்ந்த டிரைவர் பால்பாண்டி, 42, என்பவரை கைது செய்த போலீசார், புகையிலை பொருட்கள், காரை பறிமுதல் செய்தனர்.